சிந்தித்து செயலாற்றுங்கள் 01



அகிலத்தில் வாழும் மனிதர் அனைவருக்கும்
மனக்குறை என்பது அவசியம் உண்டு

ஒருவன் வேகம் இன்றி வருந்துவான்
இன்னொருவன் அதை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவான்
செல்வம் இருந்தும் நிம்மதி அற்றவரும் உண்டு
சிலருக்கு அச்செல்வம் இல்லையே என நிம்மதி இருக்காது
இதுபோன்ற உதாரணங்கள் ஏராளம்

தாம் அனைத்தையும் பெற்ற மனிதரை
இந்த அவனியில் சந்தித்திருக்கீர்களா. . .?

குறையோடு வாழும் மானிடர்
அந்த குறையினை
வாழ்வில் மையமாக்கி வாழ்கின்றனர்
அக்காரணத்தினால் இதயத்தில் துக்கமும் வேதனையும்
குடி கொள்ள துவங்குகிறது
அவ்வேதனையே ஜனனத்தினின்று
மரணம் வரை நீடிக்கிறது
அவ்விதம் உருவான அந்த குறையானது
அம்மானிடருக்கு பழகிய ஒன்றாகும்

வேறு சிலர் பற்றியும் கூறத்தான் வேண்டும்
உருவான குறையை ஒரு சிலர்
தம் சாமர்த்தியம் கொண்டு வெல்கின்றனர்
அவர்களுக்கும் ஏனையோருக்கும் என்ன வேறுபாடு ?
தாம் இது குறித்து சிந்தித்தது உண்டா ?
இதற்கான விடை மிக எளிது

எவர் குறையினை வென்று காட்டுகிறாரோ
தனது சாமர்த்தியம் கொண்டு
அதை வீழ்ச்சி அடையச் செய்கிறாரோ
அவர் அதை கடந்த நிலைக்கு செல்கிறார்
ஆக குறை ஏற்படுவது விதி பயனே
ஆனால் அக்குறையை மதி கொண்டு வெல்லும்
மானிடர்தான் மதிக்கப்படுவார்கள்

சிந்தித்து செயலாற்றுங்கள். . .





No comments:

Post a Comment