Swami Vivekananda


பிறப்புஜனவரி 121863
கல்கத்தாமேற்கு வங்கம் இந்தியா
இறப்புஜூலை 41902 (அகவை 39)
பேலூர், கல்கத்தா,  இந்தியா
இயற்பெயர்நரேந்திரநாத் தத்தா
குருஸ்ரீராமகிருஷ்ணர்
குறிப்பிடத்தக்க சீடர்(கள்)சகோதரி நிவேதிதை, சுவாமி சதானந்தர், அளசிங்கப் பெருமாள்
கையொப்பம்

சுவாமி விவேகானந்தரின் வலதுகையின், கைரேகைப் பதிவு

பிறப்பும் இளமையும்



விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இளவயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் (Scottish Church Collegeதத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறைஉண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.

சகோதர சகோதரிகள்

  • சுவாமி விவேகானந்தருக்கு மகேந்திரநாத் தத்தர் மற்றும் பூபேந்திரநாத் தத்தர் எனும் இரு இளைய சகோதரர்களும், மூத்த, இளைய சகோதரிகளும் இருந்தனர். பூபேந்திரநாத் தத்தர் இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர். சகோதரிகளில் ஒருவர் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு புகுந்த வீட்டினரின் கொடுமை தாளாது தற்கொலை செய்து கொண்டார்.[1]

இராமகிருஷ்ணருடன்

இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். இராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.

துறவறம்

1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர்1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

குரல் வளம்

தங்கக் குடத்தில் தட்டினால் எழும் கிண்கிணி நாதம் போன்ற இனிமையான குரல் என்று சட்டம்பி சுவாமிகள், சுவாமி விவேகானந்தரது குரல் வளம் குறித்துக் கூறுகின்றார். [2]

மேலைநாடுகளில்


இந்தியா திரும்புதல்
கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும்லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.
1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்திய விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார். பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி.
கல்கத்தாவில் இராமகிருசுண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். 1899 சனவரி முதல் 1900 டிசம்பர் வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டுப் பயணம் மேற்கொண்டார்.

மறைவு

1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.




சனிபகவானின் தாக்கத்திலிருந்து விடுபட சிவபெருமான் அருளிய வழி



"பத்மபுராணம்” என்னும் புராண நூலில் இருந்து பெறப்பட்டது.



சனிபகவான் ஸ்தோத்திரம்:



நம கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாய ச

நமகாலாக்னிரூனாய க்ருதாந்தாய ச வை நம

நமோ நிமலாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாய ச

நமோ விசால நேத்ராய சுக்ஷ்கோதர பயாக்ருதே

நம புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம

நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே

நமேஸ்த கோடாக்ஷாய துர்நிரீச்ரயாய வை நமே

நமோ கோராய ரெளத்ராய பீஷ்ணாய கபாலிநே

நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸதுதே

சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாய ச

அதோத்ருஷ்டே,நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே

நமோ மந்த கதே,துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே

தபஸா தகத் தேஹாய நித்யப் யோக ரதாய

நமோ நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம

ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ ஸுநவே

துஷ்டோ தகாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸு தத்க்ஷணாத்...





இதன் விளக்கம் :

கரியவனேநீல நிறம் படைத்தவனேநீலகண்டன் போல் சிவந்த காலாக்னி போன்ற உருவன் உடையவனேஉன் கருணையைப் பெற வேண்டி மீண்டும்மீண்டும் வணங்குகிறேன். 

மாமிசம் இல்லாத உயர்ந்த தேகம் படைத்தவனே. உன்னை வணங்குகிறேன்அகன்ற விழிகளையுடையவனேஉன்னை வணங்குகிறேன். பயங்கரமான தோற்றம் உடையவனேஉன்னை நான் வணங்குகிறேன். 

புஷ்கல கோத்திரத்தில் பிறந்தவனேதடித்த ரோமம் உடையவனேஉன்னை வணங்குகிறேன். 

அகன்ற தாடை உடையவனேஜடாமுடி தரித்தவனேஅகன்ற கண்களும்ஒட்டிய வயிறுமாக பயங்கரமான தோற்றமுடையவனே உன்னை வணங்குகிறேன்.

சூரிய புத்திரனே ,சூரியனுக்கு பயத்தை உண்டாக்கக்கூடிய வனேமெதுவாக நடப்பவனேநீண்ட தவத்தால் வருந்திய தாகம் உடையவனேயோகத்தில் நிலைத்து நிற்பவனேஉன்னை வணங்குகிறேன்.

ஞனக்கண் உடையவனேகச்யப் குமாரனாகிய சூரியனின் புத்திரனேஉன்னை வணங்குகிறேன்.

சனிபகவானேநீ கருணைக் கட்டினால் உன்னுடைய அன்புக்கு பத்திரமான மனிதன் மகாராஜனாகிறன்.

யானைசேனைபடைகளும் அந்தஸ்தும் பெறுகிறான். அதேபோல் உன்னுடைய கோபத்திற்கு ஆளாபவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்கணமே எல்லாவற்றையும் இழந்து பரம தரித்திரனாகி விடுகிறான்.

ஏ சனிபகவானே! தேவர்அசுரர்மனிதர்ஆயினும் அல்லர் சித்தர்வித்யாதரர்உரகர் ஆயினும் அவர்கள் எதிலுமே அல்லர் ஆயினும் அவர்கள் மேல் உன் பார்வை பட்டுவிட்டால் அவர்கள் வேரோடு அழிந்து போகிறார்கள் .ஆகையால் நீ அனுக்கிரஹ மூர்த்தியாக கருணைக்கண் கொண்டே நீ பார்க்க வேண்டும். உன்னைத் தொழுது சேவை செய்கின்ற பாக்கியத்தை அளிக்க வேண்டும்.


மந்திரம் உருவான கதை:

                   நாரதர் சிவபெருமானைப் பார்த்து ”பகவானே என்ன செய்தல் சனிபகவானால் உண்டாகும் துன்பங்கள் விலகும்இதை தங்கள் வாயிலகாக் கேட்டறிய விரும்புகிறேன்” என்று கேட்டார், பரமேஸ்வரன் கூறினார்.

நாரதரே, நான் சொல்லப் போகும் விஷயத்தைக் கவனமாக கேளுங்கள். ஏனென்றால் பக்தியுடன் இதைக் கேட்பவர்கள் கூட துன்பங்களிலிருந்து விடுதலை பெறமுடியும். சனிபகவான் சாதாரணமான தென்று எண்ணக் கூடாது. சகல கிரகங்களுக்கும் அரசனைப் போன்றனர் சனீஸ்வரன் .சூரியபகவானுடைய மகன். கறுத்ததேகம் உடையவன்அவனால் உண்டாகும் துன்பத்தை வென்ற அரசனுடைய கதையைக் கூறுகிறேன் கேள் என்றார்.

ரகு குலத்தில் பிறந்த தசரதன் என்ற அரசன் மிகவும் பிரபலமானவன். மகா பராக்கிரமசாலியான ஏழு கண்டங்களுக்கும் அதிபதி .அந்த மன்னன் ஆண்டு வரும் காலத்தில் சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலம் வந்தது. சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் மிகக் கொடிய பஞ்சம் தோன்றி பனிரெண்டு ஆண்டுகள் வரையில் பூலோகத்தில் கொடிய துன்பத்தில் ஆழ்த்துவதாகும். அதை நினைத்து தேவர்கள்அசுரர்கள் எல்லோருமே பயந்து நடுங்குக் கொண்டிருந்தார்கள். அதைப் பற்றி குல குருவான வசிஷ்டர் முதலான ரிஷிகளையும் தான் மந்திரிகளையும் கூட்டி பூலோகத்தில் துன்பம் நேராமல் தடுப்பதற்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு வசிஷ்டர் இது பிரஜைகள் துன்பப்பட வேண்டிய காலம். இதைத் தடுப்பது என்பது பிரம்மவாலும் முடியாத காரியம் என்று கூறினார்.

ஆனால் தசரதன் சும்மா இருக்கவில்லை. எப்படியாயுனும் பூலோகத்திற்கு சனிபகவானால் ஏற்படக் கூடிய துன்பம் நேராமல் பாதுகாக்க வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டவனாக வஜ்ஜிரக்கவசம் தரித்து தன் வில்லையும்அநேகவிதமான பானங்களையும் எடுத்துக் கொண்டு நட்சத்திர மண்டலத்தில் பிரவேசித்தான். சூரிய மண்டலத்திற்கப்பால் வெகு துரத்தில் பிரகாசித்த ரோகிணி நட்சத்திரற்குப் பின் பாகத்தில் தன்னுடைய ரதத்தில் அமர்ந்தபடி அந்நட்சத்தையே பின் தொடர்ந்து செல்லத் தொடங்கினர்.

அன்னப் பறவைகளைப்போல் தூய வெண்ணிறமான புரவிகளோடு கூடிய அந்த ரதம் ஒளிவிட்டுப் பிரகாசித்தது .அதன்மேல் அசைந்தாடிய கொடி எதிரிகளை விலகிச் செல்லும்படியாக எச்சரித்தது .தசரதன் ஆகாயத்தில் இன்னொரு சூரியபகவான் போல் ரோகிணி நட்சத்திரத்தை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். வில்லை வளைத்து காதுவரை இழுத்து நாணில் தொடுத்த பயங்கரமான அஸ்திரத்துடன் தசரதன் சென்று கொண்டிருந்தார். தேவர்கள்அசுரர்கள் அனைவரையும் பயந்து நடுங்கும்படிச் செய்பவனான சனிபகவான் தசரதனைப் பார்த்தான்.

சனிபகவான் புன்னைகை புரிந்தபடி ராஜராஜனே உன்னுடைய வீரம் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும். தேவர்அசுரர்மனிதர்களில்லோசித்தர்வித்யாதரர்கந்தர்வர்களிலோயட்சர்கள்ராட்சஸர்கள்நாகர்களிலோயருமே என்னை எதிர்க்கத் துணிந்தவர்கள் கிடையாது. என் பார்வை பட்டவுடன் அவர்கள் சாம்பலாகப் போய்விடுவார்கள். ஏ ராஜேந்திராநீ மகா தவங்களைச் செய்தவனும்அதிகமான புண்ணிய பலம் பெற்றவனும் ஆகையாலேயே என் பார்வை பட்டும் கம்பீரமாக நிற்கிறாய். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள். நீ எதைக் கேட்டாலும் தருகிறேன் என்று சனிபகவான் கூறினார்.

தசரதன் சனிபகவானைப் பார்த்து ”ஏ செளரி தங்கள் எக்காலத்திலும் ரோகிணி நட்சத்திரத்தைப் பின்னம் செய்யக் கூடாது. சூரியர் சந்திரர் உள்ளவரையும் இனி எக்காலத்திலும் அது நடக்கக்கூடாது. முதலாவதாக அந்த வரத்தையே தங்களிடமிருந்து பெற விரும்புகிறேன்” என்று கூறினார். அவ்வாறே ஆகுக என்று கூறி சனிபகவான் ஆயினும் உனக்கு வேண்டாய வாரம் எதுவாயுனும் கேள். உனக்கென்று எதையும் கொடுக்காமல் செல்லா மாட்டேன் அதனால் உனக்கு வேண்டியதைக் கேள் என்று கூறினார். தசரதன் ”சனிபகவானைப் பார்த்து ஆதவன் மைந்தனே ரோகிணி நட்சத்திர மண்டலத்தை தங்கள் பின்னம் செய்வதால் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கக் கூடிய கொடிய பஞ்சம் ஏற்படுமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட நீண்ட பஞ்சக்காலமும் ஏற்படக்கூடாது” அதையே நான் தங்களிடமிருந்து முக்கிய வரமாகப் பெற விரும்புகிறேன்” என்று தசரதன் மீண்டும் கூறினார்.

சனிபகவான் தசரதனை பார்த்து சொன்னர் அதைத்தான் முன்பே கொடுத்து விட்டேனேஎன்னிடமிருந்து இந்த வாரம் பெற்றதால் உன்னுடைய கீர்த்தி உலகம் உள்ளவரைக்கும் நிலைத்திருக்கும். மூவுலகிலும் உன் பெருமை பேசப்படும். உன்னிடம் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக இருக்கிறேன். வேறு என்ன வாரம் வேண்டும் கேள் என்றான் சனிபகவான். தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை தியானித்து பின் சனிபகவானைக் குறித்து மேற்கூறிய ஸ்தோத்திரத்தை கூறத் தொடங்கினான்.

மஹா பகவானும்பயங்கரமனவனும்கிரகங்களுக்கு அரசனுமான சனிபகவான் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக, "ஏ ராஜேந்திரா ,உன்னிடம் நான் மிகவும் பிரியமுள்ளவனாகி விட்டேன் .உன்னுடைய ஸ்தோத்திரம் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியளிக்கிறது. உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றார்.

அதைக் கேட்ட தசரதன், "ஏ செளரி இன்றுமுதல் யாருக்கும் துன்பம் அளிக்கக்கூடாது. தேவர்அசுரர்மனிதரானாலும் பறவைகள்விலங்குகள்ஊர்ந்து செல்லும் ஜந்துக்களானாலும் எவர்க்கும் தீங்கு செய்யலாகாது என்றார்.

அதைக் கேட்ட சனிபகவான், "ஏ ராஜனேநீ கேட்ட வரம் சரியானதுதான். ஆனால் ஒரு நிபந்தனை நீ இப்போது கூறிய ஸ்தோத்திரத்தை படிப்பவர் யாரானாலும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தடவையேனும் பாராயணம் செய்து வருபவர் எவரானாலும் அவர் அக்கணமே என்னால் உண்டாகும் பீடைகளிளிருந்து விடுபடுவார்.உளுந்துஎள்ளு முதலானவற்றை உரிய தட்சணையோடு தானம் செய்பவர்கள் கரிய நிறப் பசுவை தானமாகக் கொடுப்பவர் என்னுடைய நாளான சனிக்கிழமைகளில் நீ கூறிய இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி பூஜை செய்தபிறகும் இந்த ஸ்தோத்திரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பவர், ஜெபித்தபடி என்னை நமஸ்காரம் செய்பவர்களை நான் ஒரு நாளும் துன்புருத்தமாட்டேன். கோசாரத்தின் படியாகவும்ஜென்ம இலக்னத்தின்படி வரும் அந்தர திசைகளிலும் கூட என்னால் துன்பம் தேராமல் ரட்சிப்பேன். ஏ ரகுநந்தனாஉனக்கு நான் இந்த வரத்தை அளிக்கிறேன் என்று கூறினார்.
தசரதன் அதன் பிறகு சனிபகவானை வணங்கி விடை பெற்றுத் தன்னுடைய ரதத்தில் ஏறி நாடு திரும்பினான்.

அன்றுமுதல் சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து பின் சிரத்தையோடு இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர் சகல துன்பங்களிலிருந்தும் விடுபட்டு நரக வேதை அடையாமல் மொட்சலோகத்தை அடைவர்கள். இந்த ஸ்தோத்திரமும் நீண்ட ஆயுளும் நல்ல புத்தியும் அளிப்பதோடு சகல கிரக தோஷங்களிலிருந்தும் விடுதலை அளிக்கக்கூடியதுமாகும். இதை போன்ற புனிதமான ஸ்தோத்திரம் பூலோகத்தில் வேறு எதுவும் கிடையாது.